search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் தாக்குதல்"

    • பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான்.
    • 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளான்.

    அப்போது அந்த சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவனை 6 பேர் தடுத்து நிறுத்தி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். உடனே அவன் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான். ஆனாலும் 6 பேர் அவனை விடாமல் துரத்தி சென்றுள்ளனர்.

    அப்போது பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான். இதனால் 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த போலீசார் பள்ளி மாணவனிடம் விசாரித்தனர். பின்னர் மாணவனை தாக்கிய கும்பலை தேடினர். இதுதொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    அதில் 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த 2021-ம் ஆண்டு பள்ளியில் நடந்த பிரச்சினையில் இந்த 6 மாணவர்களும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

    அதற்கு காரணம் பிளஸ்-2 மாணவர் தான் என்று ஆத்திரம் அடைந்து 6 பேரும் சேர்ந்து அடித்து உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 2 சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும், 4 பேரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
    • போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக தெரிகிறது.

    இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்வா மாவட்டம் பெனி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் உள்ள போர்டில் மதவாசகம் எழுதியுள்ளார். இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதனால் காயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார்.
    • தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அந்த மாணவனுக்கும், அதே பள்ளியில் பயிலும் பிளஸ்-1 படிக்கும் கழுகுமலையை சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே பள்ளியில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவன் தட்டிக்கேட்டுள்ளார். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு தனியாக அமர்ந்திருந்த லட்சுமியாபுரம் மாணவரை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்த மாணவனை அப்பகுதியினர் மீட்டு கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    நாங்குநேரியில் உள்ள பள்ளியில் மாணவர், அவரது தங்கை மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை போல கழுகுமலையில் நடைபெற்று இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன்.
    • சிறுவன் சம்பவத்தன்று ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பூங்காவில் நின்று கொண்டிருந்தான்.

    அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து நின்ற பள்ளி மாணவனை பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன். இந்த சிறுவன் சம்பவத்தன்று ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பூங்காவில் நின்று கொண்டிருந்தான்.

    அவரை பூங்காவுக்கு வந்தவர்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஒரு பெண், ஸ்பைடர் மேன் உடையில் இருந்த அய்டின் பெடோனை சரமாரியாக தாக்கினார். இதில் மாணவனின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் மாணவன் முகமூடியை கழற்றுவது போன்று காட்சி உள்ளது. மாணவன் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவனது தாயார் ஷெல்லி பெடோன் தனது பேஸ்புக் பதிவில், எனது மகன் பொழுதுபோக்கிற்காக ஸ்பைடர் மேன் உடை அணிந்து நின்ற நிலையில், கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான் என பதிவிட்டுள்ளார்.

    • மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் அடித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர் சரியாக படிக்காததால் ஆசிரியர் அவரை அடித்ததாக தெரிகிறது.

    இதில் மாணவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதனை சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டது. எனவே மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கணித ஆசிரியர் மோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி பிறப்பித்துள்ளார்.

    ×